Home கனடா மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

by Jey

மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் மார்க்கம் வீதி மற்றும் எல்சான் வீதி ஆகிய இவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

டிரக் வண்டி என்றும் மற்றுமொரு வாகனமும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் இதுவரையில் வெளியிடவில்லை.

இந்த விபத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யோக் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

related posts