ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 33 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் அதிகளவானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையில் கடந்த சில தினங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஜெருசலேமின் அல்அக்ஷா வழிபாட்டு தளத்தில் பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை மோதல் இடம்பெற்றது.
இதனையடுத்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் நேற்றுமுன்தினம் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்றைய தினமும் இரு தரப்பினருக்குமிடையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமை அலுவலகமாக செயற்பட்ட 13 மாடிகளை கொண்ட காசா டவர், தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி வழங்கும் வகையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து 130 ரொக்கெட் தாக்குதலை நடத்தியது. எனினும் அவற்றில் சில இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு பிரிவால் தடுக்கப்பட்டது.
தாக்குதலில் அதிகளவான வீடுகள், வாகனங்கள், கட்டிடங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன. சம்பவத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.