ஒன்றாரியோ மக்களுக்கு அரசாங்கம் பணம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை செயல்திட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவாக இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
காபன் வெளியீட்டை தவிர்க்கும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமுலில் உள்ளது.
ஆண்டுதோறும் இவ்வாறு அரசாங்கம் ஒன்றாரியோ மாகாண பிரஜைகளுக்கு ஒரு தொகை கொடுப்பனவை வழங்கி வருகின்றது.
ஒன்றாரியோ மாகாணம் மட்டுமல்லாமல் அல்பர்ட்டா,ஸ்கட்ஸ்வான் மற்றும் மானிட்டோபா ஆகியவற்றிலும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
குடும்பங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த கொடுப்பனவுத் தொகை மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது தனிநபர்களுக்கு 373 டாலர்களும் வாழ்க்கை துணைக்கு 126 டாலர்களும் 19 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு 93 டாலர்களும் வழங்கப்பட உள்ளது.
இந்த கொடுப்பனவுத் தொகை கிடைக்கப்பெறாதவர்கள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு அது குறித்து அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக ஒன்றாரியோ மாகாணத்தின் மில்லியன் கணக்கான மக்கள் பயன் பெற உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.