கனடாவில் மின்சார கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர் காலத்தில் கனடாவில் இயற்கை எரிவாயு அல்லது மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அநேகர் 50 முதல் 100% வரையிலான சராசரி கட்டண அதிகரிப்பை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில வாடிக்கையாளர்கள் 300 வீதம் வரையில் கட்டண அதிகரிப்பினை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கனடாவில் மின்சார கட்டணங்கள் வெகுவாக உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக அளவில் அநேக நாடுகளில் மின்சார மற்றும் இயற்கை எரிவாயு கட்டணங்கள் வெகுவாக உயர்வடைந்து செல்லும் நிலையில் கனடாவிலும் இந்த போக்கினை அவதானிக்க முடியும் என சக்திவள துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுவாக அனேகமான பகுதிகளில் சக்திவள கட்டணங்களில் வெகுவான அதிகரிப்பு பதிவாகும் எனவும் இது தவிர்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.