கனடாவில் முன்னணி உணவு விநியோக நிறுவனம் ஒன்று போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றது.
Uber என்னும் முன்னணி உணவு விநியோக நிறுவனம் இவ்வாறு கஞ்சா போதை பொருளை விநியோகம் செய்து வருகின்றது.
முன்னணி இணைய வழி கஞ்சப்போதைப் பொருள் விற்பனை நிறுவனமான லெஃப்ட்லி நிறுவனத்துடன் இணைந்து கனடாவில் இந்த உணவு விநியோக நிறுவனம் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து வருகின்றது.
உணவுப்பொருள் நிறுவனமான உபர் முதல் தடவையாக உலகில் இவ்வாறான ஓர் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன்னர் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் உபர் ஈடுபட்டதில்லை.
18 வயதிற்கும் கூடிய நபர்களுக்கு மட்டும் இவ்வாறு கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது, விநியோகம் செய்யப்படும் போது அவர்களின் வயது உள்ளிட்ட தகுதிகள் பரீட்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.