Home இலங்கை நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில்……

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில்……

by Jey

விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (18.10.2022) இடம்பெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதன்போது, வர்த்தக அமைச்சர் கூறுகையில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சந்தையில் குறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

ஒரு கிலோகிராம் நாடு அரிசியின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சையரிசியின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

என்ற போதும், பால்மா விலை குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்த விலை குறைப்பு தொடர்பான சந்தை நிலைமைகள் தொடர்பில் வர்த்தக அமைச்சர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக விளக்கமளிப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

related posts