Home கனடா கைதி பற்றிய தகவல் வழங்குவோருக்கு 250000 டாலர் சன்மானம்

கைதி பற்றிய தகவல் வழங்குவோருக்கு 250000 டாலர் சன்மானம்

by Jey

டொரன்டோவின் லிட்டில் இத்தாலி எனப்படும் பகுதியில் ஹோட்டல் ஒன்றின் எதிரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ராஹிப் அலாகில் (Rabih Alkhalil ) என்ற நபர் மீது வழக்கு தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது.

குறித்த நபர் பிரிட்டிஷ் கொலம்பிய சிறைச்சாலை ஒன்றில் தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு பின்னணியில் அண்மையில் குறித்த நபர் மிக சூட்சுமமான முறையில் சிறையிலிருந்து தப்பி சென்றிருந்தார்.

குறித்த கைதியை கண்டுபிடிப்பதற்கு தேவையான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு 250000 டாலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் விபரங்கள் எதனையும் வெளியிட தேவையில்லை எனவும் சரியான தகவல்களை வழங்கினால் சன்மானம் வழங்கப்படும் எனவும் கனடாவின் ராயல் கனடிய போலீஸ் சேவையின் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சன்மானம் வழங்கும் காலப்பகுதியானது எதிர்வரும் 2023 ஆம் தேதி மே மாதம் முதலாம் தேதி வரையில் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts