Home உலகம் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்தார்

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்தார்

by Jey

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் போட்டியிட்டனர்.

இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். நடப்பு பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் பொருளாதார ஆலோசனை சரியாக வழங்காத நிதி அமைச்சர் கவாசி கவார்தெங்கை நீக்கினார். புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டை நியமித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் லிஸ்டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த இ சுயெல்லா பிரேவர்மேன் என்பவர் திடீரென நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பிரதமர் லிஸ்டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு எதிராக அவருடைய கட்சியில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அவருடைய மோசமான கொள்கைகளே, நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளதாக அவருடைய கட்சி எம்.பி.,க்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து 45 நாட்களே ஆன நிலையில் லிஸ்டிரஸின் பிரதமர் பதவி நிறைவடைந்தது. இன்று பதவி விலகினார். இதற்கிடையே, ரிஷி சுனாக்கை பிரதமராக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை தான் பதவியில் இருப்பேன் என பேட்டியளித்துள்ளார்.

related posts