பிரித்தானிய பிரதமர் பதவி விலகியது கனடாவின் வர்த்தக பேச்சு வார்த்தைகளை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் வர்த்தக பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு பிரித்தானிய பிரதமர் ட்ரஸ்ட் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
45 நாட்கள் மட்டுமே ட்ரெஸ் பிரதமராக பிரித்தானியாவில் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதனை தொடர்ந்து கனடா பிரித்தானியாவுடன் பிரத்தியேக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதுவரை காலமும் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளுக்கு அமைய கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டு வந்தது.
எனினும் தற்பொழுது பிரித்தானியாவுடன் நேரடி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வரும் கனடா இருதரப்பு வர்த்தக முதலீட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றது.
இது தொடர்பில் லிஸ்ட் பிரதமராக பதவி வகித்த காலத்திலும் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டது எனினும் அவர் பதவி விலகியது காரணமாக மீண்டும் புதிதாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது