மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.
கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமாகியுள்ளாா்.
ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராவார்.
இவர் அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவரான இவா் ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக விளங்கியதுடன் இலங்கை தமிழ் ஊடகங்களில் பல்வேறு ஆக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
மேலும் ஆறு நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ள தெளிவத்தை ஜோசப், இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய காற்று திரைப்படத்திற்கும் தொலைக்காட்சி நாடகமொன்றுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
நாளை கொழும்பில் இடம்பெறவிருந்த “குளிரும் தேசத்துக் கம்பளிகள்” புத்தக வெளியீடு அவரது தலைமையில் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.