பீல் பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இடம்பெற்ற நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் இந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 50 துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக 30 குற்றச்சாட்டுக்கள் சுமத்த்தப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.