Home இந்தியா நேர்த்தியாக இருந்த இங்கிலாந்து வீரர்களது பந்து வீச்சு

நேர்த்தியாக இருந்த இங்கிலாந்து வீரர்களது பந்து வீச்சு

by Jey

மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்ட பிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.

ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. இங்கிலாந்து கேப்டன் ஜாஸ்பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ரன்களே எடுக்க முடிந்தது. 2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

இங்கிலாந்து வீரர்கள் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. கேப்டன் பல்பிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 158 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

 

related posts