ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளது.
இந்நிலையில் கடுமையான கடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் வங்கி உறுதியளித்துள்ளது.
கூடுதலாக, நாட்டின் பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து எதிர்வரும் தமது உச்சிமாநாட்டின்போது பாகிஸ்தானுக்கும் ஒரு பெரிய நிதித் தொகையை, அந்த வங்கி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருடாந்த உட்கட்டமைப்பு நிதி அறிக்கை
பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வருடாந்த உட்கட்டமைப்பு நிதி அறிக்கை, நேற்று (27.10.2022) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கான உதவி குறித்து வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.