கனடாவில் ஈரானிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரானிய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்கு அந்நாட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கூறி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்திற்காக போராடிவரும் ஈரானிய மக்களுக்காக மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக உக்ரைனுக்கு சொந்தமான விமானமொன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியத்தில் நூற்றுக் கணக்கான்ன கனேடியர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரணிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்டித்து உலகின் ஏனைய நாடுகள் பலவற்றிலும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகள் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது