இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த்தில் நடைபெற்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி 40 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கும்.
ஆனால், தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் தென்ஆப்பிரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது. சூப்பர் 12 குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடிவிட்டன.
பாகிஸ்தான் 3-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. பாகிஸ்தான் அடுத்து தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளுடன் மோத வேண்டியுள்ளது.