ஒன்றாரியோவின் முதல்வர் டக் போர்ட்டின் கோரிக்கை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
எல்லைப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு போர்ட் மத்திய அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரி வருகின்றார்.
உரிய காரணத்தை தெளிவுபடுத்தாது இவ்வாறு கோரிக்கை முன்வைப்பது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஒன்றாரியோவுடன் இணைந்து செயற்பட தயார் என்ற போதிலும், மத்திய அரசாங்கம் மீது தேவையற்ற வகையில் போர்ட் குற்றம் சுமத்தி வருவதாக பிரதமர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.