இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது
இதன்படி 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு கொரோனா தடுப்பூசி பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கமைய, மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின்படி, மருந்து கட்டுப்பட்டு சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அத்துடன், உடல் ஆரோக்கியம் கொண்ட 225 தன்னார்வலர்களிடம் குறித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது