இஸ்ரேலிய அரச படையினர் நடாத்திய தாக்குதல்களில் காசா எல்லைப் பகுதியில் அறுபத்து ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன் காசா எல்லை பகுதியில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஹமாஸ் அமைப்பின் காசா நகருக்கான கட்டளையிடும் அதிகாரியும் தாக்குதலில் மரணித்துள்ளார். அத்துடன் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் காசா எல்லை பகுதியில் 67 பேர் மரணித்துள்ளனர்.
அவர்களில் 30 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். 300க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். பலஸ்தீனிய ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் பலஸ்தீனிற்கிடையில் கடந்த சில தினங்களாக மோதல் நிலை அதிகரித்துள்ளது. இன்று அதிகாலையில் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான குண்டுகளை பலஸ்தீன் மீது விசியுள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி நடத்தும் தாக்குதல்களினால் அதிகளவான உயிரிழப்புக்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இரு தரப்பினருக்கிடையிலும் மோதல் நீடிக்கும்பட்சத்தில் காசா முனையத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச்செல்லலாம் என சர்வதேச தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.