Home உலகம் சீனா சிறுபான்மை மக்களை ஒடுக்குவதாக அமெரிக்கா கண்டனம்

சீனா சிறுபான்மை மக்களை ஒடுக்குவதாக அமெரிக்கா கண்டனம்

by Jey

சீனாவில் சிறுபான்மை சமூகத்தினர் மத ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் ஒடுக்கப்படுவதாகவும் அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுளளது.

சீனாவின் மேற்கு மாகாணமான ஸின்ஜியாங்கை (Xinjiang) திறந்தவெளி சிறைச்சாலை என அமெரிக்கா விமர்சித்துள்ளது.

அத்துடன், மத ரீதியில் சிறுபான்மையினராக உள்ளவர்களுக்கு எதிராக சீனா முன்னெடுக்கும் துன்புறுத்தல்களையும் அமெரிக்கா கண்டித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஸின்ஜியாங் பிராந்தியத்தில் சீனா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் இனப் படுகொலையும் என முன்னாள் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஜனவரியில் தெரிவித்த கருத்தை தாமும் ஏற்றுக்கொள்வதாக இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.

அத்துடன், தீவிரவாதத்தை ஒடுக்கும் செயற்பாடுகளையே அங்கு முன்னெடுப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

related posts