இலங்கையில் இருப்பவர்கள் சம்பளத்தில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றவர்களாக இருக்கிறார்கள் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அடுத்த வருடம் உலகிலேயே மிகக்குறைந்த சம்பள அதிகரிப்பை கொண்ட நாடாக இலங்கை காணப்படுகிறது.
அதன்படி பார்த்தால் இலங்கையில் இருப்பவர்கள் சம்பளத்தில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் உள்ளவர்களில் அரச வேலை செய்பவர்களுக்கும் கூட இந்த நிலைமை தான்.
இன்று பண வீக்கத்தை 70 சதவீதமாக கொண்டுள்ள இலங்கை மக்கள் மேலதிக வரிசுமைகளுக்கு இட்டுச் செல்லப்படுவார்களாக இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை உருவாக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.