Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு ………..??

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு ………..??

by Jey

காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை அரசு சார்ந்தவர்களின் வெவ்வேறான கருத்துக்கள் நம்ப வைக்கின்றது.

எனவே, கொலையாளிகளுக்கு என்ன தண்டனையை இந்த அரசு வழங்கப்போகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பினார். கண்ணீரும் கம்பலையுமாய் போராடி வருகின்றனர்

“தமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகத் தமிழ் உறவினர்கள் 13 ஆண்டுகளாக ஏங்கித் தவிக்கின்றனர்.

2050 நாட்களுக்கும் அதிகமாக தெருக்கள் மற்றும் பொதுவான இடங்களில் நின்று கண்ணீரும் கம்பலையுமாய் போராடி வருகின்றனர். உள்நாட்டிலும், உலக அரங்கிலும் அந்த உறவுகளின் குரல்கள் ஒலிக்கின்றன.

ஆனால், அரச அதிகார வர்க்கத்தினர் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பாக பொறுப்பற்ற விதத்திலும், மலினமாகவும், நகைப்பாகவும், நையாண்டியாகவும் பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். அவற்றைப் பார்ப்போம்.

1) நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச – காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இல்லை.

2) இராணுவத்தினர் – போரின் போது எவரும் எம்மிடம் சரணடையவில்லை.

3) காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக விசாரணை அதிகாரி மகேஷ் – இராணுவத்தால் எவரும் காணாமல் ஆக்கப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் விடுதலைப்புலிகளால்தான் காணாமல் ஆகியிருப்பார்கள். காணாமல்போனவர்கள் என்போர் சிலர் வெளிநாடுகளில் உள்ளனர்.

related posts