Home இந்தியா துபாயில் இருந்து வந்த ஒரு பார்சலில் ரூ.2.45 கோடி தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து வந்த ஒரு பார்சலில் ரூ.2.45 கோடி தங்கம் பறிமுதல்

by Jey

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் செல்கின்றன.

மேலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான விமானங்கள் பெங்களூருவுக்கு வருகின்றன.

பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், துபாயில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் பெங்களூரு விமான நிலையத்தில் பார்சல் பிரிவுக்கு சென்று வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல்களை பரிசோதனை செய்தனர்.

ரூ.2.45 கோடி தங்கம் பறிமுதல் அப்போது துபாயில் இருந்து வந்த ஒரு பார்சலில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, உடற்பயிற்சி செய்யும் டிரெட்மில் கருவி இருந்தது. மேலும் அதனை சோதனை செய்தபோது, அதற்குள் தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதனால் உடற்பயிற்சி கருவியில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த உடற்பயிற்சி கருவியில் உருளை வடிவில் இருந்த 4 கிலோ 725 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு ரூ.2.45 கோடி ஆகும். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் உடற்பயிற்சி கருவி யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

related posts