நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மத அடிப்படையிலான அரசை நிறுவ அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க கடுமையாக போராடி வரும் சோமாலியா ராணுவம் போராளி குழுக்களின் உதவியுடன் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து வருகிறது.
வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார்கள் அந்த வகையில் சோமாலியாவின் மத்திய கல்காடுட் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த கயிப் என்கிற நகரை நீண்ட போராட்டத்துக்கு பின் ராணுவம் கடந்த வாரம் மீட்டது. அதை தொடர்ந்து அந்த நகரில் இருந்து பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கயிப் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது நேற்று முன்தினம் மாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 2 கார்களை ராணுவ தளத்தின் நுழைவாயில் மீது மோதி வெடிக்க செய்தனர்.