Home இலங்கை வேடுவ சமூகத்தினருக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் – ஜீவன்

வேடுவ சமூகத்தினருக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் – ஜீவன்

by Jey

வேடுவர் சமூகமே இந்த மண்ணின் உண்மையான மக்கள். இந்த நிலையில் வேடுவ சமூகத்தினருக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில், வேடுவர் சமூகம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான அழைப்பை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வேடுவர் சமூகம் அழிந்து வரும் சமூகமாக காணப்படுகின்றது.

மேலும், அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமைச்சும் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

related posts