Home உலகம் செனட் சபையில் 35 இடங்களுக்கு 21 இடங்கள் டிரம்பின் குடியரசு கட்சிக்கு

செனட் சபையில் 35 இடங்களுக்கு 21 இடங்கள் டிரம்பின் குடியரசு கட்சிக்கு

by Jey

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது.

2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த தேர்தலில் விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்தது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

செனட் சபையில் 35 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அவற்றில் 21 இடங்கள் எதிர்க்கட்சியான டிரம்பின் குடியரசு கட்சிக்கும், 14 இடங்கள் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கும் உரித்தானவை.

related posts