கனடாவில் சுமார் 1.5 மில்லியன் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் புற்று நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய புற்று நோய் அமைப்பினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தசாப்த காலத்திற்கு முன்னதாக கனடாவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக காணப்பட்டது.
தற்பொழுது இந்த எண்ணிக்கை 1.5 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.