அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைக்காலத் தோ்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஐந்து இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றனா்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைக்காலத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் தொழிலதிபா் ஸ்ரீ தனேதா் (67 வயது), மிசிகன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். அந்தத் தொகுதியில் முதன்முறையாக வெற்றி பெறும் இந்திய அமெரிக்கா் இவராவாா்.
இலினாய்ஸில் ராஜா கிருஷ்ணமூா்த்தி (49 வயது), சிலிகன் வேலியில் ரோ கன்னா (46 வயது), வொஷிங்டனில் பிரமீளா ஜெயபால் (57 வயது), கலிஃபோர்னியாவில் அமி பெரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.
இவா்களில் ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோா் தொடா்ந்து நான்காவது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனா். 6-ஆவது முறையாக கலிஃபோர்னியா தொகுதியில் அமி பெரா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்..
இதேபோல், மாகாண அவைகளிலும் இந்திய அமெரிக்கா்கள் இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.