கனடிய பொதுமக்களுக்கு அரசாங்கம் முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக உள்ளக அரங்கங்கள் கட்டிடங்கள் போன்ற இடங்களில் கட்டாயமாக முக கவசங்களை அணிவது பொருத்தமானது என தெரிவித்துள்ளது.
மேலும் கோவிட் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கூறப்பட்டுள்ளது.
கனடிய பொதுச் சுகாதார அதிகாரி டாக்டர் திரேசா டாம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சளி காய்ச்சல் மற்றும் கோவிட் நோய் தொற்று தாக்கம் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
எவ்வாறெனினும் கனடாவில் தற்போது முக கவசங்களை அணிவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிரண்டு பாதுகாப்பு வழிமுறைகளை மட்டும் பின்பற்றுவதனால் கோவிட் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பூஸ்டர் மாத்திரைகள் சளி காய்ச்சல் தடுப்பு ஊசிகள் என்பனவற்றை ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும் உள்ளக கட்டடங்களில் முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.