Home இலங்கை அரச காணிகள் மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

அரச காணிகள் மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

by Jey

வடக்கு மாகாணத்தில் முப்படையினரும் காணி சுவீகரிப்பில் எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது,
அழைப்பு

அரச காணிகள் மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பான விடயங்களில் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் காணி அமைச்சின் மேலதிக செயலர், காணி ஆணையாளர் நாயகம், காணி உரித்து திணைக்களத்தின் ஆணையாளர், நில அளவையாளர் நாயகம், இராணுவம், கடற்படை, விமானப் படை என்பனவற்றுடன், வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் காணி மேலதிக மாவட்டச் செயலர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர், மருதங்கேணி பிரதேச செயலர், வேலணை பிரதேச செயலர், ஊர்காவற்றுறை பிரதேச செயலர், காரைநகர் பிரதேச செயலர், சங்கானை பிரதேச செயலர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர், மன்னார் நகர பிரதேச செயலர், முசலி பிரதேச செயலர், நானாட்டான் பிரதேச செயலர், கரைதுறைபற்று பிரதேச செயலர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

related posts