ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட்டின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த டுவிட்டர் கணக்கு தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்திற்கு பணம் செலுத்தி இந்த போலி பெயரிலான கணக்கு உறுதிப்படுத்தப்பட்ட கணக்காக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முக்கியஸ்தர்களின், கணக்கு பயன்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் நபர் ஒருவரது அல்லது நிறுவனமொன்றின் டுவிட்டர் கணக்கு உறுதி செய்யப்பட்டது.
எனினும், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்ததன் பின்னர் புளு டிக் அல்லது உறுதி செய்யப்பட்ட கணக்கினை பெற்றுக் கொள்ள பணம் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டது.
இதன் போது டக் போர்டின் பெயரிலான மற்றுமோரு கணக்கு உரிமையாளர் பணம் செலுத்தி அந்தப் பெயருடைய கணக்கினை உறுதி செய்து கொண்டுள்ளார்.
போர்ட்டின் அதிகாரபூர்வ படங்கள் உள்ளிட்ட அனைத்யுதும் இந்த போலிக் கணக்கில் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.