ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தென்கொரியாவிற்கு சென்றிருந்தன.
இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லகொந்தகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அணித் தலைவியை காணவில்லை என அணியின் முகாமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான ஆடவர் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.
இந்தப் போட்டியை இலங்கை மகளிர் அணி வீராங்கனைகளும் கண்டுகளித்துள்ளனர்.
இந்நிலையில் போட்டியில் தாங்கள் எதிர்நோக்கிய தோல்வி குறித்து அணித் தலைவி துலானி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு செல்லும் பேருந்துக்கு அணி தலைவி துலானி வருகை தராத காரணத்தினால் இது தொடர்பில் ஒலி பெருக்கி மூலம் மைதானத்தில் அறிவிக்கப்பட்டது.
எனினும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை, இதனைத் தொடர்ந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அணித் தலைவியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தென்கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.