கனடாவின் டர்ஹம் பகுதியில் எட்டு வயது மகளை கொலை செய்து விட்ட, இந்த சிறுமியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டர்ஹம் பிராந்தியத்தின் ஒஷாவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன் போது 8 வயது சிறுமியும், 38 வயதான அந்த சிறுமியும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் வெளி நபர்கள் எவருக்கும் தொடர்பு இருக்க சாத்தியமில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.