ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் கோணாப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 1,993 விவசயிகளுக்கு… தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.
அதன்படி 2021-22-ம் நிதியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 675 விவசாய மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 1,203 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.