ஒன்றாரியோ கல்விப் பணியாளர்கள் மீளவும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்றாரியோ மாகாணத்தின் சுமார் 55000 கல்விப் பணியாளர்கள் இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
சில கோரிக்கைகளை முன்னிலைப்படுது;தி ஏற்கனவே கல்விப் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.