உக்ரைன் எல்லைக்கு அருகே போலந்தில் ஏவுகணை தாக்குதல் நடந்ததற்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரஷியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்பீல்ட் கூறியதாவது:- “உக்ரைன் மீது ரஷ்யாவின் தேவையில்லாத ஆக்கிரமிப்பு மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தவிர போலந்தில் ஏவுகணை தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்காது.
90க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் சரமாரியாக உக்ரைனில் பொழிந்தன. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வேண்டுமென்றே திட்டமிட்ட தந்திரம். அவர் உக்ரைனை பலவந்தமாக கைப்பற்ற முடியாவிட்டால், உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க முயற்சிப்பார்” என்று தெரிவித்தார்.
ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வசிலி நெபென்சியா கூறியதாவது:- “உக்ரைனும் போலந்தும் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன.நேட்டோவின் தலைவராக உள்ள போலந்து அதிபர் கூறும்போது, ‘இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை’ என்றார்.