Home உலகம் நாசா முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை

நாசா முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை

by Jey

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1969-ம் ஆண்டு முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.

இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவது அந்த திட்டத்தின் இலக்காகும்.

இதில் முதல்படியாக, மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டது. இந்த திட்டம் ‘ஆர்டெமிஸ்-1’ என அழைக்கப்படுகிறது.

அதன்படி எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவதற்கான முதல் முயற்சி கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு, எரிபொருள் கசிவு மற்றும் சூறாவளி தாக்கும் அபாயம் போன்ற காரணங்களால் ‘ஆர்டெமிஸ்-1’ திட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஓரியன் விண்கலத்துடன் எஸ்.எல்.எஸ். ராக்கெட்டை நிலவுக்கு அனுப்பும் முயற்சியை நாசா நேற்று மீண்டும் கையில் எடுத்தது.

அப்போது ராக்கெட்டில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவானது. எனினும் நாசா என்ஜினீயர்கள் எரிபொருள் கசிவை சரிசெய்தனர்.

related posts