Home விளையாட்டு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி

by Jey

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 6 ரன்களிலும் பில் சால்ட் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் (128 பந்துகள்) ஜாம்பா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடந்து ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஜாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

related posts