Home கனடா கட்டார் செல்லும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை

கட்டார் செல்லும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை

by Jey

உலகக்கின்ன கால்பந்தாட்ட போட்டியை பார்வையிட செல்லும் கனடியர்களுக்கு பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டி கட்டரில் நடைபெற உள்ளது இந்த போட்டிகளை கண்டு களிப்பதற்காக கட்டாருக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்களுக்கு பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

கட்டார் நாட்டின் சுங்கப்பிரி, சட்டங்கள் மற்றும் ஏனைய விதிகள் தொடர்பில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

பொது இடங்களில் முத்தம் கொடுத்தல் உள்ளிட்ட சிலவிடயங்கள் கட்டார் நாட்டில் சற்றே சர்ச்சைக்குரிய விடயங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாருக்கு விஜயம் செய்யும் கனேடிய பிரஜைகள் நாகரீகமான உடைகளை அணிந்து கொள்ளுமாறும் பண்பாக நடந்து கொள்ளுமாகும் சமூக மத மரபுகளுக்கு ஏற்ற வகையில் செயல்படுமாறும் அறிவறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் பிரஜைகளை புகைப்படம் எடுக்க வேண்டுமாயின் அவர்களின் அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுத்தல் குப்பை போடுதல் பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பன்றி இறைச்சி சாப்பிடுவது சட்டவிரோதமான செயல்பாடாக கட்டாரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறினால் சிறை தண்டனை அனுபவிக்க கூட நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts