செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறை மீது இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது, 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம்.
இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதாவது, 1887-ல் கட்டப்பட்டது. வங்ககடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் இந்த பகுதியை அறிந்து விலகி செல்லவும், மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த கலங்கரை விளக்கத்தில் தொடக்கத்தில் மண்ணெண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது. எல்.இ.டி. விளக்கு கடந்த 1940-ம் ஆண்டு் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டு, நவீனதொழில் நுட்பத்தில் எல்.இ.டி. விளக்கு மூலம் ஔி பாய்ச்சும் வகையில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.