றொரன்டோவில் சகல விதமான கோடைகால நிகழ்வுகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
றொரன்டோவின் பிரதான நிகழ்வுகளாக கருதப்படும் கரீபியன் கார்னிவெல், கனடா தேசிய கண்காட்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் இந்த ஆண்டில் நடைபெறாது என தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் திரளாக குழுமும் அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக றொரன்டோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.