பகுதிகளில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் கோடைகால நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் பெருந்தொற்றுக்காக வழங்கப்படும் தடுப்பூசியின் ஒரு மருந்தளவை ஏற்றிக் கொண்டவர்கள் இவ்வாறு பொது நிகழ்வுகளில் பங்கேற்ற அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், பாரியளவிலான வெளியரங்க நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான வெளியரங்க நிகழ்வுகளில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கொவிட் தொற்றுறுதியாளர் பதிவாகும் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.