சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியியதாவது , எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். இரட்டை இலையும், கட்சியும் இருப்பதால் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது நியாயமான எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம். ஒரு நாட்டிற்கு இரண்டு பலமான கட்சிகள் இருந்தால் தான் ஜனநாயகத்திற்கு நல்லது.
திமுக மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார். அதிக கூட்டணி இருந்தாலும் மக்கள் ஆதரவு வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து பலம் இழந்து வருகிறது.
மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய ஒரு கூட்டணி இருந்தால் திமுகவை வீழ்த்த முடியும். நல்ல கூட்டணி தான் தலைமை யார் என்று தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். என்றார்