பூமியில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், இடப்பற்றாக்குறையை போக்கும் வகையில் பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றில், நிலவு மற்றும் பூமியின் அருகேயுள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வியலுக்கான சூழல் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் தேடல் நீண்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி தொடர்ந்து வந்தது. இதன்படி, வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்ட ஆராய்ச்சியில் இறங்கியது. இதன் பயனாக, சமீபத்தில், ஆட்களின்றி ஆர்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.