Home இலங்கை வடகிழக்கு பகுதியில் அதிகரிக்கும் காற்றின் வேகம்

வடகிழக்கு பகுதியில் அதிகரிக்கும் காற்றின் வேகம்

by Jey

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீட்டர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.
இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts