Home இந்தியா முதல் முதலில் 70 எம்.எம். திரையுடன் அமைக்கப்பட்ட தியேட்டர்

முதல் முதலில் 70 எம்.எம். திரையுடன் அமைக்கப்பட்ட தியேட்டர்

by Jey

வடசென்னையின் அடையாளமாக விளங்கிய ‘அகஸ்தியா தியேட்டர்’, 1967-ம் ஆண்டு தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மணிக்கூண்டு அருகே கட்டி திறக்கப்பட்டது.

முதன் முதலில் இந்த தியேட்டரில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பாமா விஜயம்’ படம் திரையிடப்பட்டது. அப்போது ஒரு டிக்கெட்டின் விலை 85 பைசா. அப்போது தனது திரைப்பயணத்தை தொடங்கிய அகஸ்தியா தியேட்டர், வடசென்னை பகுதி மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்கியது. வடசென்னை பகுதியில் முதல் முதலில் 70 எம்.எம். திரையுடன் அமைக்கப்பட்ட தியேட்டர் இதுதான்.

ஒரு நாளைக்கு 4 காட்சிகள் திரையிடப்பட்டது. அப்பகுதியில் கூலித்தொழிலாளர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள பெண்கள், வீட்டில் வேலை முடிந்தவுடன் பொழுதுபோக்குக்காக தியேட்டரில் சினிமா பார்க்க காலை 10 மணி காட்சிகளுக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்த திரையரங்கில் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களும், ரஜினி, கமலஹாசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்த படங்களும் அதிகளவில் திரையிடப்பட்டு உள்ளது.

related posts