Home இலங்கை மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்

மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்

by Jey

மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டபோதிலும், அது மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு கூட்டத்தில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனையை கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

related posts