2023ஆம் ஆண்டு முதல் இலங்கையில் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மின்சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறிய அளவில் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் மின்கலத்தை பயன்படுத்தி 100 கிலோமீட்டர் வரை பயணிக்கக் கூடிய மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 86 ரூபா மாத்திரமே இதற்காக செலவு ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.