மிஸ்ஸிசாகுவாவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மிஸ்ஸிசாகுவாவின் ஹுரான்டாரியோ மற்றும் புர்ஹம்தோர்ப் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிலக்கீழ் சுரங்கமொன்றில் சிக்கிக் கொண்ட தொழிலாளி இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுரங்கத்தில் நீர் நிரம்பியதை தொடர்ந்து தொழிலாளிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ள போதிலும் ஒரேயொருவர் சிக்கிக் கொண்டுள்ளார்.
54 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.