Home இந்தியா ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம்

ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம்

by Jey

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் , கேபி முனுசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அதிமுக தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

கட்சியினர் மட்டும் இன்றி பொதுமக்கள் பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

related posts