ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் நான் இந்தியாவிற்கு வருகை தருகிறேன். ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்த பயணம் அமையவுள்ளது.
இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.
வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் பாலமாகவும் உள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது, இறுதியில் இந்தியாவிற்கும் நன்றி.இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது” என்று தெரிவித்தார்.